மாஞ்சோலையில் நடப்பது என்ன? வெளியே கசியும் தகவல்கள்
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு தொகையை வழங்க தோட்ட பணியாளர்களை நாகர்கோவில் தொழிலாளர் நலவாரிய அதிகாரிகள் அனுகியுள்ளனர். விருப்ப ஓய்வு தொகையை வழங்க, தோட்ட பணியாளர்களிடம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. நாலுமுக்கு, ஊத்து ஆகிய கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த படிவத்தை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மாஞ்சோலை எஸ்டேட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை விண்ணப்ப படிவத்தை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மாஞ்சோலை பகுதியில் ஆறு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Next Story