புனித மலைக்கு பெயர் மாற்றிய குக்கி குழு.. மணிப்பூரில் பதற்றம்
மணிப்பூரில் மலைப்பகுதியின் பெயரை குக்கி ஆயுத அமைப்பு மாற்றியுள்ளது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள புனிதமான மலையாக கருதப்படும் டாங்க்ஜிங் மலைப் பகுதியின் பெயரை, அங்குள்ள குக்கி ஆயுத அமைப்பினர், டாங்க்டிங் என்று பெயர் சூட்டி வளைவு அமைத்துள்ளனர். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றியது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் பைரன் சிங், எந்த ஒரு பெயரையும் மாற்றும் குழுக்கள் மற்றும் தனி நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Next Story