பிணத்தின் மீது உட்கார்ந்த மணிகண்டன்... பயத்தில் அலறி நடுங்கிய மக்கள் - சுடுகாட்டில் நிறைவேறிய ஆசை
திருச்சியில் இறந்தவரின் உடலுக்கு அகோரிகள் பூஜை செய்த சம்பவம் திகிலூட்டியது... பூவாளூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஓயாமரி மயானத்திற்கு தகனம் செய்ய எடுத்து வரப்பட்டது... உறவினர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பாலசுப்பிரமணியன் உடல் மீது அமர்ந்து விநோதமான பூஜைகள் செய்தார்... காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது, திருச்சி ஓயாமரி மயானத்தில் அரங்கேறிய சம்பவம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள மயானத்தில் தன் தாயின் சடலம் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story