தண்டவாளத்திற்குள் இழுத்த எமன்.. கடவுளாய் வந்த காவலர்.. பதைபதைக்க வைக்கும் காட்சி
கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையத்தில்
நேத்ராவதி எக்ஸ்பிரஸ் பிளாட்பாரம் ஒன்றில் இருந்து
நேற்று இரவு புறப்பட்டது. அப்போது ஓடும் ரயிலில் ஏற
முயன்ற சசாங் என்ற பயணி நிலை தடுமாறி ரயிலுக்கும்
நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில்
விழுந்தார். ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர்
ராகவன், பயணி விழுந்ததை கண்டு, துரிதமாக செயல்பட்டு,
ஓடிச்சென்று சசாங்கின் கையைப் பிடித்து வெளியே இழுத்து
அவர்களின் உயிரை காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
Next Story