10 நாள்களாக இருளில் மூழ்கிய கிராமம்.. மாணவர்கள் நிலைதான் மோசம்.. பரிதவிக்கும் மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, 10 நாட்களாக மின்சாரமின்றி இருளில் தவித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வயல்வெளிகளை கடந்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின் ஒயர்கள் மீது தென்னை மட்டைகள் விழுவதுடன், சீமைக்கருவேல மரங்கள் படர்வதால், இப்பகுதியில் அடிக்கடி மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆல மரக்கிளை முறிந்து விழுந்து 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன. மரக்கிளைகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை ஏற்பதில் மின்சாரம், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இடையே ஒத்துழைப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் மின்சாரமின்றி பள்ளி மாணவர்கள் இரவில் மெழுகுவர்த்தியிலும், சிம்னி விளக்குகளிலும் படித்து வருகின்றனர். இரவில் கொசுத் தொல்லையால் அவதிப்படுவதுடன், குடிப்பதற்கு கூட தண்ணீரின்றி சிரமப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுன் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்