மகாவிஷ்ணுவின் அதிர்ச்சி பின்னணி..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திடுக் தகவல் - இன்று வந்தது தான் உச்சகட்டம்
அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஆசிரியர்கள் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்...
அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மை குழுவில் இருக்கக்கூடிய ஒரு உறுப்பினர், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உடன் நீண்ட கால நட்பு என்றும், மகாவிஷ்ணு நிகழ்ச்சி தொடர்பாக அவர் தான் முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதன்மை கல்வி அலுவலர் அனுமதியின் அடிப்படையிலேயே, 2 அரசு பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடந்தது என்றும்,
அதேபோன்று முதன்மை கல்வி அலுவலர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...ஆனால் கடைசி நேரத்தில் அவர் வர முடியாத சூழலில், மகா விஷ்ணுவை அசோக் நகர் பள்ளியிலிருந்து சைதாப்பேட்டை பள்ளிக்கு அழைத்துச் செல்லுமாறு முதன்மை கல்வி அலுவலர் கூறியதன் படியேதலைமை ஆசிரியர் தமிழரசி, மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை பள்ளிக்கு அழைத்துச் சென்றதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழரசியும், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதல்படியே நிகழ்ச்சி நடந்தது என்று தெரிவித்திருந்த நிலையில்
விசாரணையின்போது முதன்மைக் கல்வி அலுவலர் இதை மறுத்தார்.மகாவிஷ்ணு, அரசு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது இது முதல் முறை அல்ல என்றும்,
கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பதும், அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பரம்பொருள் அறக்கட்டளை உறுப்பினர்கள், அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள், அறக்கட்டளை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.