ஜாமீன் கேட்ட மகாவிஷ்ணு - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு கைது செய்தனர். என் நிலையில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக் வந்தது. எப்போது மகாவிஷ்ணு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது. மேலும் தனது பேச்சை முழுமையாக கேட்காமல் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.