மகா விஷ்ணு சர்ச்சையில் திடுக்கிடும் புது தகவல்.. உண்மையை உடைத்து பகீர் கிளப்பிய தலைமை ஆசிரியர்
சர்ச்சையில் சிக்கியுள்ள மகாவிஷ்ணு இரண்டு பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கும் தகவல் வௌயாகியுள்ளது
சர்ச்சையில் சிக்கியுள்ள ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும் 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுமை் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமையாசிரியார் தமிழரிசியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமையாசிரியை தமிழரசி நன்கொடைக்கு ஆசைப்பட்டு, மகா விஷ்ணுவின் சொற்பொழிவு வழங்கியதோடு, சைதாப்பேட்டை பள்ளிக்கும் தானாகவே மகா விஷ்ணுவை அழைத்துச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரிவித்துள்ளார். எதற்காக மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை பள்ளிக்கு அழைத்துச் சென்றீர்கள் என்ற அதிகாரிகளின் கேள்விக்கு , அவருக்கு வழி தெரியாது என்பதால் தான் அழைத்துச் சென்றதாக தமிழரசி தெரிவித்திருக்கிறார். அவரிடம் விசாரணை தொடரும் நிலையில், மேலும் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது