ஃபுல் மப்பில் Porsche காரில்.. 160km.. 2 உயிரை எடுத்த சிறுவன்..தந்தை பெரும்புள்ளி..

x

புனேயில் போர்ஷே சொகுசு காரை மதுபோதையில் ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், மின்னல் வேகத்தில் சென்ற போர்ஷே சொகுசு கார், பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையில் காரை வேகமாக ஓட்டிய சிறுவன் மது போதையில் இருந்தது தெரியவந்தது. நம்பர் பிளேட் இல்லாத கார் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 14 மணி நேரங்களில் ஜாமீன் வழங்கப்பட்டது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. 17 வயதாக இருந்தாலும் விபத்தை ஏற்படுத்தியவரை, சிறுவனாக கருதக்கூடாது என போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சிறுவனின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் விஷால் அகர்வால் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 18 வயது ஆகாத சிறுவனுக்கு காரை வழங்கியது, சிறுவன் மது அருந்துவார் என தெரிந்தும் பார்ட்டிக்கு அனுப்பியது ஆகிய குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஷால் அகர்வாலை தேடிவந்த போலீசார் சம்பாஜிநகர் பகுதியில் அவரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்