ஒற்றை இடத்தால் மதுரையே கொந்தளிக்குது.. மக்களை கோபமூட்டும் ஒரு பெயர்

x

மதுரை மாவட்டம், திருமங்கலம், கப்பலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 10 முதல் உள்ளூர் வாகன ஓட்டிகள் 50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் வருகிற 30ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்