மாவுக்கட்டு போட்ட கையில் திடீரென தெரிந்த மாற்றத்தால் அகற்றப்பட்ட கை..
மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த அழகு வசந்த் என்ற சிறுவன், அரசுப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்ததில், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறுவன் மாவுக்கட்டு போட்டுள்ள நிலையில், சில நாட்களில் கை அழுகியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சிறுவனின் இடது கை அகற்றப்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுவன், தனக்கு செயற்கை கை வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றார்.
Next Story