இஸ்லாமியர்கள் கொண்டாடிய முனியாண்டி கோயில் திருவிழா! இதுதாங்க மதுரையன்ஸ் மனசு
இஸ்லாமியர்கள் கொண்டாடிய முனியாண்டி கோயில் திருவிழா! இதுதாங்க மதுரையன்ஸ் மனசு
மதுரை அருகே மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடந்த கோவில் திருவிழாவிலும், பிறைக்கொடி ஏற்றும் நிகழ்விலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சிக்கந்தர் சாவடி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த சாமி ஊர்வலத்தின்போது பிறை கொடிகளுடன் காத்திருந்த இஸ்லாமியர்கள், முனியாண்டி சாமி கொடி கம்பத்தை தொட்டு ஆசிர்வதித்த பின்னர் பிறை கொடியை ஏற்றி வைத்தனர். சமூக நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாக நடைப்பெற்ற இந்த விழாவில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story