நெடுஞ்சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.. கோர்ட் அதிரடி | Thanthitv
பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் அரபுக்கனி என்பவர் தாக்கல் செய்த மனுவில், பழனிசெட்டிப்பட்டி- பூதிப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் விபத்துகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, பழனிசெட்டிப்பட்டி - பூதிப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story