ஓடிப்போன இளஞ்ஜோடிகளை 6 மாதம் கழித்து மீட்பதால் என்ன பிரயோஜனம்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி

x

மாயமான மாணவிகளை மீட்டுத்தரக்கோரி, பானு, நாகலட்சுமி, முத்தாயி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிமன்றம், போலீசாருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது.

மாணவியை காதலித்து கடத்தி கொண்டு சென்ற பிறகு, , 6 மாதம் கழித்து , கர்ப்பமான. நிலையில் மாணவியை மீட்பதில் என்ன பிரயோஜனம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு விசாரணை தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல் துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லையா? என வினவிய நீதிபதிகள், CELL PHONE TOWER SIGNAL மூலம் ஓடி போன MINOR காதலர்கள் எங்கு உள்ளனர் ? என கண்டறிந்து, தொடர்புடைய காவல் நிலையத்தில் கூறி அவர்களை கைது செய்ய முடியாதா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மாணவி மாயமான வழக்குகளில், விசாரணை அதிகாரி மாணவிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்