தொடர் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள்.. சிறைத்துறைக்கு சரமாரி கேள்வி.. நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

குற்றம் செய்துவிட்டு முதல்முறையாக சிறைக்கு வருபவர்களை தனியாக வைப்பதற்கு ஏற்பாடு உள்ளதா என, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அதில், கடந்த மாதம் ஜாமின் பெற்று போனவர்கள் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், அவர்கள் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது, முதன்முறையாக தவறு செய்துவிட்டு, சிறைக்கு வரும் இளைஞன், பழைய குற்றவாளிகளுடன் பழகுவதால், தொடர் குற்றவாளியாக மாறுவது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக, நீதிபதி உத்தரவின்பேரில், மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் சிறைத்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, மதுரை சிறையில், முதல் குற்றவாளிகளை வயதுவாரியாக பிரித்து வைத்திருப்பதாக சிறைத்துறை டிஐஜி பழனி குமார் தெரிவித்தார்.இதையடுத்து,

இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக சிறைகளில், முதல் குற்றவாளிகளை தனியாக சிறையில் அடைக்க ஏதேனும் அரசு தரப்பில் ஏற்பாடு உள்ளதாக என நீதிபதி கேள்வி எழுப்பினார். அவ்வாறு இருந்தால், அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்