2019ல் நடந்த கொடூர தாக்குதல்.. ஒரு வார்த்தையில் முடித்து வைத்த நீதிமன்றம்

x

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு, பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், 9 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மட்டும் தலைமறைவாகினர். இந்த வழக்கில், 6 பேரை விடுவித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 9வது நபர் தமிழரசன், மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தன்னையும் வழக்கில் இருந்து விடுவிக்கும்படி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரை நீதிமன்றம் சாட்சிகளின் அடிப்படையில் விடுவித்ததாகவும், இது மனு தாரருக்கும் பொருந்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்