அரசு பள்ளிகளில்... - கல்வி அலுவலருக்கு பறந்த அதிரடி உத்தரவு
சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டு முதல், ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், பள்ளி ஆசிரியர்களும், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களும் சேர்ந்து, ஆங்கில வழிக்கல்வியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் மீண்டும் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க உத்தரவிடக் கோரி, சாமிநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, மனுதாரரின் கோரிக்கை குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கும், முதன்மைக் கல்வி அலுவலருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Next Story