தோழி பிறந்தநாளுக்கு அழைக்கப்படாத நெஞ்சுக்கு நெருக்கமான உயிர் தோழன்.. ரத்த வெள்ளத்தில் மடிந்த நண்பன்

x

தோழி பிறந்தநாளுக்கு அழைக்கப்படாத நெஞ்சுக்கு நெருக்கமான உயிர் தோழன்.. ரத்த வெள்ளத்தில் மடிந்த நண்பன் - தூங்கா நகரில் பகீர்

பெண்ணுக்காக நடந்த தகராறில் சண்டையை விலக்கிவிட சென்ற நண்பர் குத்திகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.மதுரையை சேர்ந்த ஜாஹிர்உசேன், சரவணக்குமார், ரஞ்சித்குமார் ஆகியோருக்கு 3 பெண் தோழிகள் இருந்துள்ளனர். அதில் சவரணக்குமாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிற்கு பிறந்தநாள் வந்த நிலையில், சரவணக்குமாரை அழைக்காமல் மற்ற அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலுடன் சென்று அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ரஞ்சித்குமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணக்குமாரை குத்தியுள்ளார். அப்போது சரவணக்குமாரை காப்பாற்ற சென்ற காதர் இஸ்மாயிலையும் ரஞ்சித்குமார் குத்தியுள்ளார். அதில் படுகாயம் அடைந்த காதர் இஸ்மாயில் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், சரவணகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த மோதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்