வெறும் 15 நிமிடத்தில் 50 மிமீ.. மதுரை இதயமே நொறுங்கியது.. மேக வெடிப்பு இல்ல..அதுக்கும் மேல

x

வெறும் 15 நிமிடத்தில் 50 மிமீ.. மதுரை இதயமே நொறுங்கியது.. மேக வெடிப்பு இல்ல..அதுக்கும் மேல

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர், கரை புரண்டு ஓடும் வைகை நதி, கண்மாய் உடைப்பு என மதுரை மாநகரமே, மழை பாதிப்பால் தவித்து வருகிறது... அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வழக்கமாக வடகிழக்கு பருவமழை என்றால், கடலோர மாவட்டங்களும் அதன் மக்களும்தான் அஞ்சி நடுங்குவார்கள், ஆனால் இந்த முறை, தூங்கா நகரமான மதுரையின் தூக்கத்தையே கெடுத்துவிட்டது, வடகிழக்கு பருவமழை.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே இரவு நேரத்தில் மழை பெய்து வந்தது. ஆனால் நேற்றைய தினம், காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 9.8 சென்டிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது.

இதில் 3 மணி முதல் 3.15 மணிக்குள் மட்டுமே, 4.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

30 ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்ற பெரு மழையை சந்தித்த மதுரை, நேற்றைய தினம் மீண்டும் அதே திண்டாட்டத்தை சந்தித்துள்ளது.... நகரப் பகுதி, புறநகர் பகுதியென எந்த பாரபட்சமும் இல்லாமல் கொட்டிய மழையில் எங்கு பார்ததாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது தூங்கா நகரம்

மதுரையின், இதயப்பகுதியான கோரிப்பாளையம், தெப்பக்குளம், அண்ணாநகர், பெரியார் பேருந்து நிலையம், தல்லாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது

முல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள கண்மாய் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் புகுந்த மழை நீர், முல்லை நகர் முழுவதும் சூழ்ந்து, அம் மக்களை அவதிக்குள்ளாக்கி விட்டது

பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

மாவட்ட நிர்வாகம் மொத்தமும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 இடங்களில் தங்கும் வசதியும், உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

மேக வெடிப்புக்கு நிகராக கொட்டி தீர்த்த மழை காரணமாக மதுரை தத்தளித்து வரும் நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்