மதுரையில் பேய் போல பரவும் காய்ச்சல்.. பேரதிர்ச்சியில் மக்கள்

x

மதுரையில் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்காக வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் செயல்படாத தொலைபேசி எண்களை அச்சிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில், அரசு பொருட்காட்சியை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கில், காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் அச்சிடப்பட்டிருந்த தொலைபேசி எண்கள் மற்றும் செல்போன்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டனர். அவற்றில் 2 தொலைபேசி எண்களும் தவறானவை என பதில் வந்தது. ஒரு செல்போன் எண்ணுக்கு எந்த பதிலும் வரவில்லை. மற்றொரு செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசியவர் ராங் நம்பர் என்று கூறி தொடர்பு துண்டித்துள்ளார். இவ்வாறு அனைத்து எண்களும் செயல்படாமல் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், காய்ச்சல் பரவி வரும் நிலையில், செயல்படாத எண்களை அச்சிட்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்