மனைவிக்கு தெரியாமல் போனை எடுத்த கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட் - கணவன்மார்களே உஷார்.. உஷார்..

x

மனைவிக்கு தெரியாமல் போனை எடுத்த கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த கோர்ட் -கணவன்மார்களே உஷார்.. உஷார்..

தனிநபா் உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், அவற்றை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது கைபேசி ஆவணங்களை, தனது கணவர் ரகசியமாக பதிவிறக்கம் செய்து, விவகாரத்து வழக்கு தொடுத்ததாக ஒரு பெண் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவா் பதிவிறக்கம் செய்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார். ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார். இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்