மக்களுக்காக சிகிச்சையை விட்டு சேற்றில் இறங்கிய கலெக்டர்

x

மக்களுக்காக சிகிச்சையை விட்டு சேற்றில் இறங்கிய கலெக்டர்

மதுரையில் சேறும் சகதியுமாக கிடந்த பகுதியில் நடந்தே சென்ற மாவட்ட ஆட்சியர், வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.

மதுரை 2வது வார்டுக்கு உட்பட்ட திருமலை நகர், பாண்டியன் நகர், அடமந்தை ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 300க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. பரிசல் மூலம் அங்கிருந்து மீட்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளம் பாதித்த திருமலை நகரில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சேறும் சகதியுமான மழைநீரில் நடந்தே சென்று வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்ததோடு, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மக்கள் நலன் காக்க களமிறங்கியது அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்