மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு... அதிரடி கேள்விகளால் திகைத்து நின்ற அதிகாரிகள்

x

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு... அதிரடி கேள்விகளால் திகைத்து நின்ற அதிகாரிகள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனை வளாகத்தில் பல தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், அவற்றை சீரமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

வளாகத்தில் நாய்கள் மற்றும் எலிகளைக் கண்ட அவர், அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

உடனிருந்த மதுரை காவல் ஆணையர் லோகநாதன், மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்