பார்டரில் நாட்டை பாதுகாத்து சொந்த ஊரில் பாலியல் வன்கொடுமை செய்த கோரம்..
பெண்ணை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரரை, பெண்ணின் உறவினர்கள் காவல்நிலைய வாசலில் வைத்தே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ராணுவ வீரரான இவர், ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த ராமன், முதுகலை பட்டதாரி பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் பெண்ணை மிரட்டி கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், இரு தரப்பும் விசாரணைக்காக காவல்நிலையத்தில் ஆஜராகினர். அப்போது, இரு தரப்பும் ஒருவரையொருவர் காவல்நிலைய வளாகத்திலே தாக்கி மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.