கார்களிடம் கட்டாய கட்டண வசூல்.. வடமாநில ஊழியர்களிடம் வாக்குவாதம்.. 3 நிமிடங்களுக்கு ரூ.135..
மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க, ஜூன் மாதம் முதல் புதிய ஏஜென்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் வணிக ரீதியிலான கார்கள், தனியார் கார்களுக்கு தனித்தனியாக புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் கார்களுக்கு 3 நிமிடத்திற்கு 135 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கட்டணம் வசூல் செய்யும் வடமாநில ஊழியர்களுக்கும், தனியார் கார் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் உள்ளே சென்று வரும் நேர அடிப்படையில், கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் என கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story