இடமாற்றம் செய்யப்படும் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் | Madurai AIIMS Hospital | Thanthitv
மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் வளாகம், 2025-ஆம் ஆண்டு நவம்பரில் ஓரளவு கட்டி முடிக்கப்படும் என்றும், அதற்குள் மருத்துவமனைக் கட்டிடம் போன்ற வசதிகள் இருக்கும் என்றும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய தொகுதி மாணவர்களுக்கான வகுப்புகள், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தின் புதிய நரம்பியல் தொகுதி கட்டிடத்தில் நடைபெறும் என, மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த்ராவ் தெரிவித்துள்ளார். அதேசமயம் நான்காம் ஆண்டில் நுழையும் முதல் தொகுதி மாணவர்கள் தனியார் விடுதிக்கு மாற்றப்படுவார்கள் என்றும், புதிய தொகுதி மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் பாதுகாப்பு கருதி மாணவிகள் கல்லூரி வளாக விடுதிக்குள் தங்கவைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதுதவிர முதல் குழுவில் உள்ள 50 மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக, ஓராண்டு மட்டும் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளதாகவும் அனுமந்த்ராவ் தெரிவித்துள்ளார்.