"சில பேர் டிமிக்கி கொடுக்குறாங்க அவங்கள ஒரே அமுக்கா அமுக்கி.." - அமைச்சர் முன் ஆதீனம் சொன்ன வார்த்தை
தொடர்ந்து மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை அமைச்சர்கள் ரிப்பன்வெட்டி தொடங்கி வைத்தனர். இதைதொடர்ந்து, குன்றக்குடி, மதுரை, மயிலம், திருவாடுதுறை ஆதின உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். பின்னர் 100 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கம்பத்தில், சேவல், மயில், வேல் உடன் கூடிய முருகப்பெருமான் கொடியேற்றப்பட்டது. சொற்பொழிவு அரங்கம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக்கண்காட்சி, 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் நடக்கும் ஐந்து ஆய்வரங்கங்களில் வெளிநாட்டினர் உட்பட ஆயிரத்து 300 பேர் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
Next Story