வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் தட்டினாலே ஆக்‌ஷன்.. களமிறங்கும் போலீசார்.. மதுரை சம்பவம் ஸ்டார்ட்

x

மதுரை மாநகரில் முதல்முறையாக 100 வார்டுகளில் காவல்துறை - பொதுமக்களை இணைக்கும் வகையில் 150-க்கும் அதிகமான வாட்ஸ்அப் குழுக்குள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

வார்டு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வருகிறதோ, அந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பாய்வாளர்கள் வாட்ஸ்-அப் குழுவின் அட்மினாக இருப்பார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார்களை உரிய ஆதரங்களோடு தெரிவிக்கலாம். ரகசிய தகவலை அளிக்க வேண்டும் என்றால், அட்மின் மூலமாக தனியாக அனுப்பலாம், ஒவ்வொருவரின் தகவலும் ரகசியம் காக்கப்படும். வாட்ஸ்-அப் குழுக்களில் தவறான தகவல்கள், ஆபாசமான புகைப்படங்கள், குழந்தைகள், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளின் புகைப்படங்களை பகிரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் குழுக்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். வாழ்த்து செய்திகள், அரசியல் பதிவுகள், சாதி, மதங்களுக்கு எதிரான பதிவுகளையோ, மோதல்களை தூண்டும் வகையிலான பதிவுகளையோ பதிவிடக்கூடாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை, சமூக விரோதிகள் நடமாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளிட்ட தகவல்களை அனுப்பலாம். குழுக்களில் பகிரப்படும் தகவல்களை, உறுப்பினர்கள் வேறு குழுக்களில் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்