நியோமேக்ஸ் மோசடி... ஏமாந்தவர்களுக்கு மீண்டும் பணம்... ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள் - பரபரப்பான மதுரை

x

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த நியோ மேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஓப்படைத்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிலங்களை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுக்கும் பணிகள் வழக்கறிஞர்கள் மூலமாக மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஏராளமான வாடிக்கையாளர் திரண்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்