தகறாறு செய்த அண்ணன் - பெற்றோர் கண் முன்னே வெட்டி சரித்த தம்பி - மதுரையில் பரபரப்பு..

x

மதுரை பாலரெங்கபுரத்தை சேர்ந்த லட்சுமி - வல்லரசு தம்பதியினருக்கு, கருணாமணி, நினைவரசன் உட்பட 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் என 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கருணாமணி கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய நிலையில், மதுபோதையில் பெற்றோரின் தேநீர் கடைக்கு சென்று அவர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நினைவரசன் தட்டிக்கேட்ட நிலையில், அவரை கொலை செய்வதாக கருணாமணி சவால் விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையில் அமர்ந்திருந்த நினைவரசனை, அங்கு வந்த கருணாமணி கத்தியால் தாக்கியதில், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்