9 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்ட விவகாரம்.. மாவட்ட ஆட்சியர்க்கு பறந்த உத்தரவு | Thanthitv

x

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலை 9 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை பூட்டியதால், கோயிலில் பூஜை செய்ய முடியவில்லை என ஊரை சேர்ந்த சந்திரா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கோயிலில் பூஜைக்கு அனுமதி கோரினால் திறந்ததும் செய்துக்கொள்ளலாம் என காவல்துறையும், வருவாய்துறையும் சொல்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் பூட்டப்பட்டு இருப்பதால் அப்பகுதி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்படுவதாகவும், அரசிடம் கோரிக்கை விடுத்தும் பதில் கிடைக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் அளிக்கக்கோரி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்-


Next Story

மேலும் செய்திகள்