பிரச்சனைக்குரிய தொழிற்சாலை... தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த விளக்கம்
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மண்டலப் பொறியாளர் குணசேகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொக்கலாஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலை,
நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளிலிருந்து பெறப்படும் கோழிக்கழிவுகள், 5 டன் கொள்ளளவு கொண்ட ஆவியில் வேகவைக்கப்பட்டு, 40 நிமிடங்கள் கழிந்த பின் புரோட்டின் பவுடராக பெறப்படுகிறது என்று கூறியுள்ளார். இவற்றை தாவரங்களுக்கு ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த, 30 மீட்டர் உயரம் உள்ள புகைப்போக்கி, ஈரஸ்கரப்புர் பொருத்திய வடிப்பான் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கோழிக் கழிவுகள் வேவைக்கப்படும் இடம் தவிர மற்ற வெளிப்புறங்களில் துர்நாற்றம் எதுவும் உணரப்படவில்லை என்றும், கெமிக்கல் கழிவுகளோ, மருத்துவக் கழிவுகளோ இத்தொழிற்சாலையில் கையாளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.