வெளுத்து வாங்கிய மழை தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் வெளியான அதிர்ச்சி

x

மதுரையில் 10 நாட்களுக்கு மேலாக தொடரும் கன மழை காரணமாக, அவனியாபுரம் 100ஆவது வார்டில் உள்ள ராஜபிரபு நகர் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து கண்மாய் போல் காட்சியளிக்கின்றது. மழைநீர் இடுப்ளவுக்கும் மேல் சூழ்ந்துள்ளதால், குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழைநீர் வெகு நாட்களாக வெளியேறாததால் பூச்சிகள், பாம்புகளுடன் வசிக்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர்கள்

தெரிவித்தனர். மாநகராட்சிக்குள்ளேயே இருந்தும் தனித்தீவு போல வசித்து வருவதால், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினரிடம் முறையிட்ட பின், தற்காலிகமாக ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. ஆனாலும் மழை நீர் அதன் மூலம் வெளியேறாததால் ராஜபிரபு நகர் குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்