"பக்கத்து வீட்டில் குடியேறிய போலீஸ்- மனைவியிடம் தெரிந்த மாற்றம்...என் வாழ்கையே தலைகீழா மாறிடுச்சு"
தன் மனைவியுடன் தகாத உறவில் இருந்து கொண்டு, தன் வாழ்க்கையை காவல்துறை அதிகாரி அழித்து விட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மதுரை அழகர்நகர் பகுதியை சேர்ந்தவர் தயாளன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில், வீட்டருகே வசித்துவந்த காவல் துறை அதிகாரி செல்வராஜ் என்பவருடன் தயாளனின் மனைவி தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த தயாளன், மனைவியை தட்டிக்கேட்டதில் குடும்பத்தில் தகராறாகி இருக்கிறது. இந்நிலையில், மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகம் வந்த தயாளன், காவல்துறை அதிகாரி செல்வராஜ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். தன் மனைவி மற்றும் பிள்ளைகளை தன்னிடம் இருந்து செல்வராஜ் பிரித்து வைத்திருப்பதாகவும், தொடர்ந்து, விவாகரத்து கொடுக்க கோரி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருக்கிறார்.