இளைஞர் ஆணவப்படுகொலை.. இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் - மதுரையில் பரபரப்பு

x

இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உறவினர்கள் போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெருவைச் சேர்ந்த அழகேந்திரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால், அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழகேந்திரனை கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வேலாம்பூர் கண்மாயில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழகேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்