வட்டி செலுத்த தவறிய பெண்ணை சரமாரியாக வெட்டி தீர்த்துக்கட்டிய பேங்க் ஊழியர்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

x

மதுரையில், தோட்டத்திற்குள் வைத்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்...

சிவகங்கை மாவட்டம் இடைகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி இவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கலைச்செல்வியின் செல்போன் தரவுகளை கைப்பற்றி கடந்த 23 நாள்களாக துப்பு கலக்கி வந்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வந்த போலீசார், மானாமதுரை அன்னியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கைது செய்திருக்கின்றனர். கூட்டுறவு வங்கி ஊழியரான இவர், கலைச்செல்விக்கு தனது நண்பர்கள் மூலம் சுமார் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இந்த கடனுக்கு கலைச்செல்வி வட்டி செலுத்த தவறியதாகவும், இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் இளங்கோவனே வட்டி செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த இளங்கோவன், கடன் பணத்தை திருப்பி கேட்டதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த இளங்கோவன், கலைச்செல்வியை தோட்டத்திற்கு தனியே வரவழைத்து கொன்றது தெரியவந்திருக்கும் நிலையில், போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்