மதுரை மாநகர காவல் ஆணையர் ஆஜராக அதிரடி உத்தரவு-உயர்நீதிமன்ற கிளை

x

பால்வள கூட்டுறவுத்துறை பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையுடன், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாயாண்டி என்பவர், 2016-ல் பால்வள கூட்டுறவுத்துறையில் பல்வேறு முறைகேடுகளுடன் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும், செயற்பொறியாளராக பதவி உயர்வுபெற தகுதி பெற்றும், பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை எனக்கூறியும் மனு தாக்கல் செய்தார். அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், இவ்விவகாரம் குறித்த விசாரணை அறிக்கையுடன் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் வருகிற 23-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்