மதுரையில் வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. அதிரடி காட்டிய போலீஸ் | Madurai | Melur | Thanthitv

x

மேலூர் அடுத்த பூஞ்சுத்தி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமநாதன். இவர், மேலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காம்ப்ளக்ஸில் வாடகைக்கு கடை எடுத்து தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்த வில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில், காம்ப்ளக்ஸை நடத்தி வரும் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகள், ராமநாதனை தட்டிக்கேட்டிருக்கின்றனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு இரு தரப்பினரும் மேலூர் காவல்நிலையம் சென்றுள்ளனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவரான ராமநாதன் தரப்பு, இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டைகளால் டிரஸ்ட் நிர்வாகியான வழக்கறிஞர் விஜயபாரதியை கண்மூடித்தனமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலத்த காயத்துடன் விஜயபாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராமநாதன் உட்பட மூவரை கைது செய்ததுடன், மேலும் தலைமறைவாக சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்