``தமிழகம் முழுவதும்..'' அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | High Court
கும்பகோணத்தை சேர்ந்த சுந்தரவிமலநாதன் உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்
செய்திருந்தார். இதில் தமிழகத்தின் அனைத்து அரசு
அலுவலகங்களிலும் சக்கர நாற்காலி, குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தர உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஏற்கனவே இது போன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 2021இல் நீதிமன்றம் உரிய உத்தரவை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 2021இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை
தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 4
வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Next Story