2 பிரதமர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வீரராக இருந்தவர் மீது வழக்கு... - கோர்ட் போட்ட உத்தரவு
- இரண்டு பிரதமர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வீரராக பணிபுரிந்த ஜனார்த்தன் என்பவர் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்
- ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இரண்டு பிரதம மந்திரிகளுக்கு சிறப்பு பாதுகாவலராக இருந்த ஜனார்த்தனன்
- என்பவர் விருப்ப ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.
- 2020இல், கொரோனா ஊரடங்கின் போது தனது தாயாருக்கு மருந்து வாங்க வெளியே சென்ற போது
- காவல்துறையினர் இவரைப் பிடித்த போது, அவர்களுடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
- தற்போது நான்கு வருடம் கழித்து இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தன் மீது நான்கு வருடம் கழித்து பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்கும் படி போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story