வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி காவல் ஆய்வாளர் வசந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு...
x

வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் இன்ஸ்பெக்டர் வசந்திக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

மதுரை வியாபாரிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட

குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி காவல் ஆய்வாளர் வசந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்

வசந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், வியாபாரிடம் 10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் என் மீது புகார் புனையப்பட்டது. என் மீதான காழ்ப்புணர்ச்சியில் சிலர் இந்த பிரச்சனையில் என்னை சிக்கவைத்துள்ளனர். குற்ற வழக்கு விசாரணை முழுமையாக முடிந்தால்தான் உண்மை தெரியவரும். ஆகவே குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறைதுறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி,

"குற்ற வழக்கு விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது.

ஆகவே குற்ற வழக்கு விசாரணையும், அதே சமயத்தில் துறைதுறை ரீதியான விசாரணையும் தொடரலாம் என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்