"பொம்பள புள்ளைங்கள புடிச்சா தான் ஏத்துவாராம்.." - ஓட்டுனர் செயலால் கொதித்த மக்கள்
மதுரை மாவட்டம் ராயபாளையத்தில் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகளை தரக்குறைவாக பேசிய ஓட்டுனரை கண்டித்து இரண்டு அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகளிருக்கான இலவச பேருந்தில், பெண்களை ஏற்றுவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story