உயிர் காவு வாங்கிய மதுரை பயங்கரம்... திடீர் திருப்பமாக டாக்டர் கைது
மதுரை மகளிர் விடுதி விபத்து தொடர்பாக மருத்துவர் ஒருவரை கைது செய்த போலீசார், உரிமையாளர், மேலாளர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை பெரியார்பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு, 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, ஆய்வு செய்த போது, விடுதியின் கீழ் செயல்பட்ட விசாகா மருத்துவமனை பதிவு சான்று பெறாமல் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எலக்ட்ரோபதி மருத்துவரை பணியமர்த்தி மோசடியாக அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இது குறித்து துணை இயக்குனர் அளித்த புகாரின் கீழ் மருத்துவரை கைது செய்த போலீசார், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குபதிவு செய்துள்ளனர். இதனிடையே, தீ விபத்திற்குள்ளான மகளிர் விடுதியை இடிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்க உள்ளது.