ஒரே நேரத்தில் 2 வாலிபர்களுடன் தாய் கள்ளக்காதல்.. நேரில் பார்த்ததும் நின்ற குழந்தை மூச்சு..
மேலூர் அருகேயுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மலர் செல்வி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் துபாயில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, அதே கிராமத்தை சேர்ந்த 2 இளைஞர்களுடன் மலர்செல்விக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதனை இருவருக்கும் தெரியாமல் மலர்செல்வி ரகசியம் காத்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது தகாத உறவு காதலர்களில் ஒருவருடன் மலர் செல்வி நெருக்கமாக இருந்ததை அவரின் 5 வயது பெண் குழந்தை பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அனைவரிடமும் குழந்தை தெரிவித்து வந்ததால் அதிர்ச்சியில் இருந்த மலர்செல்வி, தன் தகாத உறவு காதலனுடன் சேர்ந்து அருகிலுள்ள கிணற்றில் குழந்தையை வீசி கொலை செய்திருக்கிறார். இரவோடு இரவாக உறவினர்களுடன் சேர்ந்து மலர்செல்வியும் குழந்தையை தேடி நாடகமாடிய நிலையில், விடிந்ததும் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், குழந்தையின் சடலத்தை கிணற்றில் இருந்து மீட்ட போலீசார், தாய் மலர்செல்வி உட்பட அவரின் தகாத உறவு காதலர்களான இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.