மட்டன் சுக்கா, சிக்கன் போன்லெஸ், மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு -தடபுடல் விருந்து கொடுத்த அமைச்சர்
மதுரையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
விருந்தில், கரண்டி ஆம்லெட், மட்டன் சுக்கா, குடல் கிரேவி, சிக்கன் போன்லெஸ், மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு ஆகியவை பரிமாறப்பட்டன. உணவு பரிமாறக்கூடிய அரங்குகளில் அமைச்சர் மூர்த்தி தொண்டர்களோடு நின்று உபசரிப்புகளை கவனித்து வருகிறார்.
Next Story