தூங்கி கொண்டிருந்த நபரின் உயிரை பறித்த `பீடி' - மதுரையில் பயங்கரம்

x

மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்த கொத்தனார் சர்க்கரை என்பவர், குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரை நாராயணபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் படுத்துறங்கியிருக்கிறார். அப்போது, அருகில் படுத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரிடம் பீடி கேட்ட சர்க்கரை, தர மறுத்த அவரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த முருகன், தூங்கி கொண்டிருந்த சர்க்கரையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், முருகனை கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்