ஆட்கொணர்வு மனு கொடுத்தவருக்கு அபராதம்.. மதுரை கோர்ட் அதிரடி
மனைவியை ஆஜர்படுத்த கோரியவருக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டியன், மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், எதிர்தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மனைவி, குழந்தையை யாரும் கடத்தவில்லை என்பதை தெரிந்தும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தனர். அபராத தொகையை, 4 வாரத்திற்குள் சட்டப் பணிகள் ஆணையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Next Story