வாய் பேச முடியாத பேத்தி.. வாளி ஊன்றி வந்த மூதாட்டி.. கண்ணீரில் மதுரை கலெக்டர் ஆபிஸ்

x

தண்ணீர் வாளியை ஊன்றுகோலாக பயன்படுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்த மூதாட்டி, பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் 76 வயது மூதாட்டி பஞ்சவர்ணம். வாய்பேச முடியாத பேத்தியோடு வசித்துவரும் அவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் வாளியை ஊன்றுகோலாக பயன்படுத்தி வந்திருந்தார். பெண் பிள்ளையோடு கடும் சிரமத்தோடு வாழுவதாகவும், பட்டா அளித்தால் கடைசி காலத்தில் படுக்க இடமாவது கிடைக்கும் எனவும் அவர் சொன்னது காண்போரை கண்ணீர் சிந்த செய்தது.


Next Story

மேலும் செய்திகள்