#BREAKING || நெருப்பில் துடிதுடித்து பிரிந்த உயிர்கள்.. மதுரையை பேரதிர்ச்சிக்கு தள்ளிய சம்பவம்

x

மதுரையில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 648 தகுதியற்ற கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பழமையான தகுதியற்ற 648 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் அளிக்கப்பட்ட தகுதியற்ற கட்டடத்தில் செயல்பட்டு வந்த பெண்கள் தங்கு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, நோட்டீஸ் அனுப்பப்பட்ட கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆட்சியர் நடவடிக்கை. ஆட்சியர் தலைமையிலான குழுவில் மாநகராட்சி ஆணையர், பேரிடர் மீட்புத்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்