கள்ளழகரால் அதிரப்போகும் மதுரை.. தடையை உடைத்த நீதிமன்றம்.. வெளியான அதிரடி உத்தரவு
மதுரை கள்ளழகர் திருவிழாவில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அவர் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பது வழக்கும். பாரம்பரிய வழக்கத்திற்கு மாவட்ட ஆட்சியர் முன் அனுமதி பெற்றே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஆட்சியரின் உத்தரவுக்கு, மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் எந்த அதிகாரத்தின்படி இந்த உத்தரவை பிறப்பித்தார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆட்சியரின் உத்தரவு பாரம்பரிய முறையை பாதிக்காதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Next Story